இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீன நாடளவிலுள்ள கிராமப்புறங்களில் மொத்தமாக 75ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டு இவ்வாண்டின் 75.4 விழுக்காடான இலக்கு எட்டப்பட்டது. கிராமப்புற நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 27534 கோடி யுவான் மதிப்புள்ள நிலையான இருப்பு முதலீடு நிறைவேற்றப்பட்டது.
2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனக் கிராமப்புறங்களில் நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 46லட்சத்து 40ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. சுமார் 30ஆயிரம் வட்டங்கள் மற்றும் 5லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் அனைத்திலும் சிமெண்ட் சாலைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
