எகிப்து அரசுத்தலைவருடன் ஷிச்சின்பிங்கின் சந்திப்பு

Estimated read time 1 min read

எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் முற்பகல் கைரோ நகரிலுள்ள சூரியன் மாளிகையில் அந்நாட்டு அரசுத்தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், நமது கூட்டு வழிகாட்டலின் கீழ், சீனாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்தல், உயர் நிலையிலான பரிமாற்றப் போக்கைப் பராமரித்தல், பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் செயல்பட வேண்டும். பரஸ்பர ஒத்துழைப்பை முன்னெடுத்து, வளர்ச்சிக்கான நெடுநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். மானிடவியல் பரிமாற்றத்தை ஊக்குவித்து, மக்களுக்கிடையேயான தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நாடுகடந்த குற்றங்களுக்கு எதிராக எதிர்த்துப் போரிட்டு, ஊழலுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளிக்க வேண்டும். பலதரப்புவாத சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்தெல் ஃபத்தா அல்-சிசி கூறுகையில், எகிப்துக்கும் சீனாவுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்டதிலிருந்து, இருநாட்டு உறவுகள் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்தி, மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பலனளிக்கும் சாதனைகளை பெற்றுள்ளது. எகிப்து, ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான நெடுநோக்கு கூட்டாளி உறவு பெரும் வளர்ச்சியை அடைய ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author