ஐப்பானின் ஆக்கிரமிப்பு மீண்டும் எழுந்தன: கருத்துக் கணிப்பு

ஜப்பான் அரசு, ஆயுத ஏற்றுமதி கொள்கையை ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திருத்தியுள்ளது. ஜப்பான் அரசின் முந்தைய ஆயுத ஏற்றுமதி கொள்கையின்படி போர் அல்லாத 5 குறிப்பிட்ட வகை பயன்பாடு கொண்ட ஆயுதங்களை ஜப்பான் ஏற்றுமதி செய்யலாம். ஆனால், தற்போது இந்த வரம்புகள் அகற்றப்பட்டுள்ளன.  

இதன் மூலம், கொள்கை ரீதியில் சக்தி வாய்ந்த ஆயுதங்களின் ஏற்றுமதிக்கு ஜப்பான் அனுமதி வழங்கும். மேலும், குறிப்பிட்ட சூழ்நிலையில், மோதலில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இது குறித்து சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலகளவில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

ஜப்பானின் வலது சாரி சக்தியின் இராணுவமயமாக்கச் செயல், 2ஆவது உலக போருக்கு முன்பு இருந்த அந்நாட்டின் இராணுவமயமாக்கத்தின் விரிவாக்க செயல்கள் போல உள்ளது. ஆபத்தான பாதையில் ஜப்பான் மீண்டும் சிக்குவதற்கான சாத்திகம் அதிகம் என்று 82.5 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author