உலகளாவிய மூலோபாய நிலைப்புத்தன்மை குறித்த சீன மக்கள் குடியரசு மற்றும் ரஷிய கூட்டாட்சியின் கூட்டு அறிக்கை மே 8ஆம் நாள் மாஸ்கோவில் வெளியிடப்பட்டது.
2ஆவது உலகப் போரின் வெற்றி தினம் மற்றும் ஐ.நா.நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தக் கூட்டறிக்கையில், உலகளாவிய மூலோபாய நிலைப்புத்தன்மையைப் பேணிக்காத்து வலுப்படுத்த வேண்டும் என சீனாவும் ரஷியாவும் முதன்மையானதாக வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறையில் சர்வதேசச் சமூகம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களுக்கு இணங்க செயல்பட்டு, உலகளாவிய மூலோபாய நிலைப்புத்தன்மை தொடர்பாக இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ள கூட்டு ஆவணங்களின் எழுச்சி, கோட்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகள் ஆகியவை இந்த கூட்டு அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு இவை தொடர்பான விளக்கங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.