“₹31 லட்சம் எனக்கு வேணாம்!” திருமண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! 

Estimated read time 0 min read

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சௌரப் ராணா, தனது திருமணத்தில் ₹31 லட்சம் வரதட்சணையை மறுத்து சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்.

பிப்ரவரி 19 அன்று ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற திருமணத்தின் போது, திலக் சடங்கின் ஒரு பகுதியாக மணமகளின் குடும்பத்தினர் வழங்கிய ₹31 லட்சத்தை அவர் பணிவுடன் ஏற்க மறுத்தார். “படித்த மற்றும் பண்பட்ட வாழ்க்கைத் துணையை அடைந்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரதட்சணை; எனக்குப் பணம் முக்கியமல்ல” என்று அவர் கூறியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

அதிர்ஷ்டத்தின் அடையாளமாக லட்சுமி – விநாயகர் படம் மற்றும் ஒரு தேங்காயை மட்டும் பெற்றுக்கொண்ட அவர், பணத்தை மீண்டும் மணமகளின் குடும்பத்தினரிடமே ஒப்படைத்தார்.

வரதட்சணை ஒரு சமூகத் தீமையாகப் பார்க்கப்படும் இன்றைய சூழலில், உயர் கல்வி பயின்ற ஒரு இளைஞர் அதனைப் பகிரங்கமாக எதிர்த்து, மணமகள் பிரீத்தியை தனது உண்மையான கௌரவமாக ஏற்றுக்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமண மண்டபமே கைதட்டல்களால் அதிர்ந்த நிலையில், சௌரப் ராணாவின் இந்தத் துணிச்சலான செயலைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

படித்த இளைஞர்கள் இது போன்ற மாற்றங்களை முன்னெடுத்தால், சமூகத்தில் நிலவும் வரதட்சணை என்ற கொடுமைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என உள்ளூர்வாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author