வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான டொ லாம் ஆகஸ்ட் 18ஆம் முதல் 20ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
அவர் பதவி ஏற்ற பின் முதலாவது வெளிநாட்டு அரசு முறை பயணம் இதுவாகும். இரு தரப்புறவுக்கான உயர் நிலை மற்றும் நெடுநோக்குத் தன்மை இதன் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளது.
19ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், டொ லாமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புறவுக்கு முன்னுரிமையை வழங்க, இரு நாட்டுறவை ஆழமாக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
சீனாவின் சுற்றுப்புற நாடுகளில் முன்னுரிமை தகுநிலையை வியட்நாம் பெற்றுள்ளது. நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை இரு தரப்பும் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும்.
மேலும் உயர் நிலை வாய்ந்த கூட்டு அரசியல் நம்பிக்கை, பயனுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆழமான, பயன் தரும் ஒத்துழைப்பு முதலிய 6 துறைகள் உள்ளிட்ட வளர்ச்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சீனத் தரப்பு தெரிவித்தது.
இரு தரப்பினரின் கருத்துகளின் மூலம், சீன-வியட்நாம் சிறப்பு நட்புறவு வெளிக்காட்டப்பட்டுள்ளது. தத்தமது நாடுகளின் வளர்ச்சிக்கான முக்கிய காலக்கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புகளை ஆழமாக்கும் விருப்பம் மற்றும் மன உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்கு இது வழிகாட்டியது. ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை, இரு நாடுகளுக்கிடையில் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்திற்கு அடிப்படையாகும்.
இதன் மூலம் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பை வலுப்படுத்தி, தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவி செய்வது போன்ற பயன் தரும் ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.