இமாச்சலில் பெரும் சோகம்! டாடா சுமோ மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை… 13 பேர் பரிதாப பலி!

Estimated read time 1 min read

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் கில்லார் – உதய்பூர் சாலையில் பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பேருடன் டாடா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறை ஒன்று , சுமோ மீது மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த13 பேரும் அங்கேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் சிக்கியுள்ள உடல்களை மீட்கவும், அந்த பாதையை சரி செய்யும் பணியிலும் தீவிரமாக உள்ளனர்.கில்லார்-உதய்பூர் சாலையானது, கரடுமுரடான மற்றும் நிலச்சரிவு அபாயம் நிறைந்த நிலப்பரப்பு பகுதியாகும். பருவமழைக் காலத்தில் பாறைச்சரிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. தற்போது ஹிமாச்சல் மாநிலத்தில் மழை பெய்வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author