நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் கிடையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Estimated read time 0 min read

நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கம்ரூப் மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அசாம் அடுத்த 5 ஆண்டுகளில் வடகிழக்கு இந்தியாவின் தொழில்துறை மையமாகும் எனவும், ஊடுருவல்காரர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மட்டுமல்ல, இந்திய மண்ணிலிருந்தே முற்றிலும் நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

ஒரு அந்நியர் கூட இந்தியக் குடிமகனின் உரிமையைப் பறிக்க பாஜக அரசு அனுமதிக்காது என்றும் அமித் ஷா தெரிவித்தார் .

You May Also Like

More From Author