மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு சிறப்புத் தரிசனம் செய்தார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து, இக்கோவிலை புனரமைப்பதற்கான இந்தியா -இந்தோனேசியா கூட்டு பாதுகாப்புத் திட்டத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த பிரம்பானன் சிவன் கோவில் வளாகத்தைப் பாதுகாத்து வரும் இந்தோனேசிய மக்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பில் பிரதமர் மோடி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
