புதிய ஐந்தாண்டு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டு வரை ஓராண்டுக்கு 19 கோடி உள்வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை சீனா இலக்காகக் கொண்டுள்ளது.
பயணிகளின் நுகர்வை அதிகரிக்கவும் சர்வதேசப் பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும், வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்கான சீனாவின் விரிவான முயற்சிகளை இது வெளிப்படுத்துகிறது.
இத்திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் உள்வரும் சுற்றுலாச் செலவினங்கள் 15000 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலரை இலக்காகக் கொண்டுள்ளது. இத்தகைய இலக்குகளை அடைய உதவும் வகையில், உள்வரும் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது பெறும் சேவைகளை சீனா மேலும் சீரமைக்க உள்ளது.
விசா இல்லாத நுழைவுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், சர்வதேச விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கான இணைப்புகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணம் செலுத்துதல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் வசதி அளிக்கப்படுவதோடு, வரித் திரும்பப் பெறும் நடைமுறைகளும் மேலம் எளிதாக்கப்படும். வெளிநாட்டு மொழி சுற்றுலா சேவையும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
