டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து OP (OP – Outpatient) சீட்டு வாங்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக, ‘நலம்AI’ என்ற வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று முதல் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இப்புதிய சேவையை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனையில் இனி ஓபி சீட்டு வாங்க அலைய வேண்டாம்! ‘நலம்AI’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகம்
