அண்மையில் அமெரிக்க கீன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் லாமண்ட் ஓ. ரிபோல்லெட்டுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்.
இரு நாட்டு உயர் கல்வி நிலையங்கள் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்திச் சீன-அமெரிக்க நட்புறவின் முன்னேற்றத்துக்குப் பங்காற்ற வேண்டுமென அதில் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டுகையில், சீன-அமெரிக்க உறவு இரு நாட்டு மக்களின் நலன் மட்டுமல்ல மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கும் முக்கியமானதாக இருக்கும். கல்வித் துறையிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்களிடையிலுள்ள புரிந்துணர்வின் முன்னேற்றத்திற்கும் துணை புரியும்.
இரு நாட்டு உயர் கல்வி நிலையங்கள் பல்வகையான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி சீனா பற்றியும் அமெரிக்கா பற்றியும் நன்கு அறிந்து கொள்ளும் இளைஞர்களை வளர்த்து இரு நாட்டுறவுக்கு மேலதிக பாலங்களை உருவாக்க வேண்டுமென ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு மே திங்கள், அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செஜியாங் மாநிலக் குழு செயலாளராக பதவியேற்ற ஷிச்சின்பிங்கின் உதவியில், வேன்சோ பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் கீன் பல்கலைக்கழகமும் ஒத்துழைத்து வேன்சோ-கீன் பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவெடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதுவரை 3300மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
அண்மையில், அமெரிக்க கீன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் அனுப்பி வேன்சோ-கீன் பல்கலைக்கழகத்தின் கல்வி நிலைமை மற்றும் சாதனைகளை அறிமுகப்படுத்தினார்.