5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ள ஆலோசனைக் கூட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளதால், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காய்ச்சல் தொடங்கிவிட்டதால், ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்களும் தற்போதே தயாராகி வருகின்றனர்.
