தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், திமுக கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு ஊக்கப்பரிசுகளை அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதன்படி, தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி அதிக வாக்குகள் பெற்றுத் தரும் திமுக ஒன்றியச் செயலாளருக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும் என்றும், சிறப்பாகச் செயல்படும் திமுக முகவர்கள் உள்ளிட்டோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஓபிஎஸ் அறிவித்துள்ள இந்தப் பரிசு அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
