மதிக்க கூட இல்லை..என்னை ஒதுக்க அவர் யார்? இபிஎஸ் குறித்து – ஜெ.தீபா

Estimated read time 0 min read

சென்னை : தவெக தலைவர் நடிகர் விஜய், அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சிகளின் ஓட்டையும் பிரிப்பார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜயின் சமீபத்திய மேடை பேச்சுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேசியவற்றோடு ஒப்பிட்டு, “இன்றைய அவரின் மேடை பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசியது தான்” என்று தீபா கூறியுள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை பலமுறை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் எடப்பாடியை சந்திக்க முயன்றபோதும் அவர் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். “என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா வாரிசாக தீபா, அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளது கட்சி உள்ளேயே புதிய பிளவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய கருத்துகள் அதிமுகவின் ஒற்றுமைக்கு சவாலாக அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, ஜெ.தீபாவின் இந்த பேட்டி அதிமுக தலைமைக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்துவதோடு, விஜய் மற்றும் தவெகவின் எழுச்சியை மறைமுகமாக அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் த.வெகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

More From Author