ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளருக்கான சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டு உச்சி மாநாடு கிர்கிஸ்தானில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் யெர்மெக்பாயேவு சீனாவின் சி.ஜி.டி.என். க்குப்  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பரஸ்பர நம்பிக்கைக்கான ஒரு தளத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்து, பரந்த அளவிலான துறைகளில் தனித்துவமான பல அடுக்கு ஒத்துழைப்பு பொறிமுறையை நிறுவியுள்ளதுஎன்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வளர்ந்து வரும் “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் குடும்பம்” குறித்துப் பேசிய அவர், பல நாடுகள் இவ்வமைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். இவ்வமைப்பானது நாட்டின் அளவு அல்லது பொருளாதார வலிமையின் அடிப்படையில் கோடுகளை வரைவதில்லை, அனைத்து நாடுகளும் சம தகுநிலையைப் பெறுகின்றன. இதுவே இவ்வமைப்பின் மதிப்பு மற்றும் கவர்ச்சி ஆகும் என்றார்.

உலகளாவிய ஆட்சிமுறை முன்னெடுப்புகள் குறித்து அவர், கூறுகையில், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கினால் முன்மொழியப்பட்ட உலகளாவிய ஆட்சிமுறை முன்னெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொலைநோக்குத் தாக்கத்தை ஏற்படுத்துபவை, காலத்திற்கு ஏற்றவை என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author