ஓபிஎஸ்-க்கு ஸ்டாலின் தரும் ‘உச்சபட்ச’ பதவி.. அறிவாலயத்தை அதிரவைக்கும் மெகா டீல்! 

Estimated read time 1 min read

கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்று பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது ஒரு ‘மெகா ஆஃபர்’ குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சட்டமன்ற சபாநாயகராக (Speaker) ஆக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பேசும்போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இந்த வியூகமானது அதிமுகவை அரசியல் ரீதியாகச் சிதைக்கவும், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளைத் தக்கவைக்கவும் திமுக வகுத்துள்ள மாஸ்டர் பிளான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author