சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 1 கோடியே 30 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, 5 விழுக்காட்டு அதிகரிப்பை நனவாக்கியுள்ளது என்று இக்கூட்டத்தின் செய்தித்தொடர்பாளர் லூ சின் ஜியான் எடுத்துக்கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வெளிப்புற சூழலால் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகள் ஆழமடைந்துள்ளன. பொருளாதார செயல்பாடுகள் இன்னும் பல இன்னல்களையும் அறைகூவல்களையும் எதிர்கொள்கிறன. ஆனால் சீனப் பொருளாதாரத்தின் மீது முழு நம்பிக்கை கொள்கின்றோம் என்றார்.