இமாச்சல பிரதேசத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் 5000 ஆண்டுகள் பழமையான குளிர்கால திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமிக்க திருவிழா கொண்டாடப்பட காரணம் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.
சில மரபுகள், சில திருவிழாக்கள், சில அடையாளங்கள் வழி வழியாக நாம் கடைபிடித்து வந்த பண்பாடு, கலாச்சாரத்தை மனதிற்குள் இதமாக நுழைத்து அதன் தொன்மையை உணர வைத்துவிடுகின்றன… இப்போது நீங்கள் பார்ப்பது மரபுகளை உள்ளே மறைத்திருக்கும் பாரம்பரியமிக்க ரௌலானே என்ற பழமையான உயிரோட்டமுள்ள ஒரு சடங்கைத்தான்… இதனை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் கிராமங்கள் கூட, அது எங்கிருந்து தொடங்கியது என்று கூற முடியவில்லை.
வானுயர்ந்து நிற்கும் இமாச்சல பிரதேசத்தின் மலைகளின் நிழல்களைத் தாங்கி நிற்கும் பள்ளத்தாக்குகளில் ரெளலானே என்பது இந்தப் பூமி விட்டுவிட மறுக்கும் ஒரு அற்புதமான நினைவலைகள் காற்றோடு காற்றாக ஒரு நினைவாகக் கலந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும், புல்வெளிகளில் மேல் படிந்துள்ள பனியின் சுமையை சூரியன் உறிஞ்சும் காலத்தில், இமாச்சல பிரதேசத்தின் உள்ள கல்பா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ரௌலானே திருவிழாவுக்காக ஒன்று கூடுகிறார்கள்.
5000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் இந்தத் திருவிழா, பெரும்பாலான மதங்களை விடப் பழமையானது, சுவடிகளில் எழுதப்பட்ட கலாச்சாரத்தை விட தொன்மையானது, நவீன இந்தியாவை விட மிகமிக பழமையானது… அர்த்தமுள்ள இந்த திருவிழாவின் வயதை உள்ளூர் மக்கள் அறிந்திருக்காவிட்டாலும், உணர்வுபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்… திருவிழாவில் பாடப்படும் பழமையான பாடல், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டுள்ளது, அதற்கு யார் இசையமைத்தார்கள் என்று தெரியவில்லை என்றாலும், அங்கிருக்கும் கிராம மக்களுக்கு அது பரிச்சயமானது, அவர்களது ரத்தத்தில், எலும்புகளில் பதிந்துள்ளது… ப்ரீத்.. வரலாற்றை விட பழமையான ஒரு பண்டிகையான, திருவிழாவான ரௌலேனுக்கு எந்த மூலக்கதையும் இல்லை.
புராணமும், வழக்கமும் தனித்தனியாக இல்லாத ஒரு காலத்திற்கு ரௌலானே சொந்தமானது என்றும், அப்போது பிரார்த்தனை என்பது நடனமாகவும், அந்த நடனம் வானத்திற்கு ஒரு செய்தியை கூறும் ஒரு கருவியாகவும் இருந்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்… எனினும், நீண்ட குளிர்காலத்தில் கின்னாரின் புல்வெளி பகுதிகளான கந்தாவை கண்காணிக்கும் சௌனி, அதாவது மலை தேவதை அல்லது பாதுகாவலர் ஆவிகளுக்குப் பிரசாதத்தை அளிக்கும் சடங்காக ரௌலானே தொடங்கியது என்பது நீடித்த நம்பிக்கையாக உள்ளது.
மந்தைகளை பாதுகாப்பது, திடீர் மூடுபனியில் தொலையும் பயணிகளை வழிநடத்துவது, கடுமையான குளிர்காலத்தை மென்மையாக மாற்றுவது எனச் சௌனியின் இருப்பை கிராம மக்கள் விவரிக்கிறார்கள்… மலை தேவதைக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் பூக்களையும், பால் மற்றும் கைகளால் செய்யப்பட்ட ஆபரணங்களையும் வழங்கினர். தலைமுறை தலைமுறையாக அந்த, அமைதியான செயல், இன்றும் நாம் காணும் சடங்காக விரிவடைந்து நிற்கிறது. ப்ரீத்.. ரௌலா மற்றும் ரௌலேன் இருவரும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், குழுவில் இருந்தும் சமூக பெரியவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ரௌலானே பண்டிகையின்போது பாரம்பரிய உடையை தரிக்கிறார்கள்… கம்பளி டோரி, பட்டி, கைகளால் நெய்யப்பட்ட கச்சோ மற்றும் மூதாதையர்களின் ஆபரணங்களை அணிந்து பழமையான நாகரிகத்துக்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள். அந்த சடங்கின்போது இரு ஆண்கள், ரௌலா, ரௌலானே என ஜோடியாக இணைந்து நடிக்கிறார்கள், ரெளலா தனது முகத்தில் சிவப்பு துணியை சுற்றிக்கொள்ள, ரௌலேன் உள்ளூரின் புனித மலர்களான சாம்கா, நர்காசாங், பத்ரியில் இருந்து வடிவமைக்கப்பட்ட விரிவான மலர் கிரீடத்தை அணிந்து கொள்கிறார்கள். கையுறைகள் அவர்களின் தோலை மறைக்கவும், முகமூடிகள் அவர்களின் தனித்துவத்தை அழிக்கின்றன.
காரணம் ஒரு மனித முகம் அந்தச் சடங்கை மிகச் சாதாரணமாகக் காட்டும் அதே நேரத்தில் முகமூடி அணிந்த உருவம், ஒரு பாத்திரமாக மாறுகிறது என்பதாலும் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. இது திருமணமாக அல்லாமல், பக்தி மற்றும் ஆன்மிக உலக வழிகாட்டுதலின் கலவையாகப் பார்க்கப்படுகிறது. ஆண்மை மற்றும் பெண்மை ஆகியவற்றின் ஒன்றிணைப்பை பிரதிபலிக்கிறது.
தொடர்ச்சியாக நடக்கும் ஊர்வலத்தில், டிரம்ஸ் இசையானது இதயத்துடிப்பை எகிற வைக்கிறது, கோயில் மணிகளின் ஓசை, பாரம்பரிய சால்வைகளின் சலசலப்பு போன்றவை காற்றை அடர்த்தியாக மாற்றுகிறது. ஊர்வலத்தை வழிநடத்தும் ஜான்புண்டுலு, அதாவது கொடூரமான முகமூடி அணிந்த மனிதர்கள் முன்னோக்கி செல்வது, தீய எண்ணம் கொண்ட ஆவிகளை விரட்டுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் அவர்களை அகன்ற கண்களால் பார்க்கிறார்கள்.
அவர்கள் கடந்து செல்லும்போது பெரியவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொள்கிறார்கள். இறுதியாக நாகின் நாராயண் கோயிலில் அந்த ஊர்வலம் நிறைவடைகிறது. வெளியாட்களுக்கு, ரௌலேன் என்பது உடை, நடனம் மற்றும் காட்சி ஆகியவற்றின் கலவையாகத் தோன்றலாம். உள்ளூர்வாசிகளுக்கு, இது ஒரு நிகழ்ச்சி அல்ல. அது உயிரோட்டமுள்ள ஒரு நிகழ்வாகக் காலம் உள்ளவரைக் கடைபிடிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
