அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும், திமுக கூட்டணியில் இணைவதற்குத் திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகக் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் ராமதாஸ் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தின் முடிவில், விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தைலாபுரம் தோட்டத்திலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
