தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

Estimated read time 0 min read

2026 தேர்தல் தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் இது என தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுகவின் சாதனை 5 லட்சம் கோடி கடன் பெற்றது தான் என்றும், இந்தியாவில் அதிக கடன் வாங்கிய சாதனையை ஸ்டாலின் படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

5 ஆண்டுகளில் தமிழகத்தை முன்னேற்ற எந்த பெரிய திட்டமும் திமுக கொண்டுவரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்கள், நிதியை பெற்று முதன்மை மாநிலம் என்ற பெருமையை பெற்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது ஊழல் நிறைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author