சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி

சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கொந்தளிப்பான காலத்தில் சீனாவின் நிதானத்தன்மையின் மதிப்பு அதிகரித்து வருகின்றது என்று இதில் கலந்துகொண்ட 89.3 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 5 விழுக்காடாகும். இவ்வாண்டு சீன பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டு வரம்பின் உச்ச நிலையை இது எட்டியுள்ளது. அதேவேளையில், இவ்வாண்டின் உலக பொருளாதார வளர்ச்சி பற்றி சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு 3.1 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. இந்த இரு தரவுகளைப் பார்த்து ஒப்பிட்டால், சீன பொருளாதாரத்தின் உறுதி வெளிகாட்டப்பட்டது என்று 89.8 விழுக்காடான கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அளவுக்கு அப்பாற்பட்ட பொருளாதார நாடான சீனா நிதானமாக வளர்வது, நிலையற்றத்தன்மை வாய்ந்த உலகிற்கான நிதானமான ஆற்றலாக மாறியுள்ளது என்று 79.8 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author