ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 6ஆவது திரைப்பட விழா

Estimated read time 0 min read

ஐ.நாவின் சீன மொழி தினம் மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் 6ஆவது திரைப்பட விழா ஏப்ரல் 17ஆம் நாள் ஜெனிவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம், ஐ.நாவுக்கான ஜெனிவாவிலுள்ள சீன நிரந்தர அலுவலகம், ஜெனிவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகம் ஆகியவை இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷென் ஹெய்சியுங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சீனாவின் 5000 ஆண்டு கால வரலாற்றை சீன மொழி ஏற்று கொள்கின்றது. சதுர வடிவான எழுத்துகளில் வரலாற்றுத்தன்மை வாய்ந்த அறிவுகள் அடங்குகின்றன என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறினார். சர்வதேச உச்ச நிலை ஊடகமான சீன ஊடகக் குழுமம், சீன பண்பாட்டைப் பரவல் செய்வதையும் நாகரிக பரிமாற்றத்தை முன்னேற்றுவதையும் கடமைகளாக கொண்டு, புதிய யுகத்தில் சீனாவின் பாரம்பரிய பண்பாட்டைச் செழுமையாக்க பாடுபட்டு வருகின்றது என்றார்.

You May Also Like

More From Author