Lஈரான் நாட்டு போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ என்ற கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தாக்குதலை நடத்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இந்தியத் துறைமுகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை” என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவுடன் இணைந்து கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஈரானியக் கப்பல், பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் கடும் போர்ப்பதற்றத்தின் பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 130 பேருடன் பயணித்த அந்த கப்பலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
