“2026 தேர்தலோடு எடப்பாடி பழனிசாமி கவர்னர் வேலைக்குத்தான் போகணும்! அதுவும் அமித்ஷா மனசு வைத்தால் மட்டும்தான் முடியும்”- கனிமொழி

Estimated read time 0 min read

குறிஞ்சிப்பாடியில் திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை ஆதரித்து நேற்று இரவு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கனிமொழி பேசுகையில், “இந்த தொகுதியின் நிரந்தர எம்எல்ஏ இவர். உங்கள் வீட்டுப் பிள்ளை உங்கள் தேவைகள் எல்லாம் நிறைவேற்றி தரக்கூடிய ஒரு அமைச்சர் , சட்டமன்றஉறுப்பினர் நம்முடைய தலைவர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை ஆவார். முதல்வர் மு க ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரிய மாவட்ட செயலாளர், அமைச்சர். கட்சியில் அனைவரையும் அன்பைப் பெற்றுள்ள நம்முடைய வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம். தமிழ்நாட்டில் வேற எந்த அமைச்சருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. முதல் முதலாக தமிழகத்தில் ஒரு ஒரு விவசாய பட்ஜெட்டை ஒரு அமைச்சர் படிச்சாரு என்றால் அவர் இவர் தான். இப்ப ஃபேமஸ் ஆகிவிட்டார். தனியா ஒரு ஸ்டெப்பே வந்து விட்டது. எம் ஆர் கே ஸ்டேப் . முதல்வரால் இங்கு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மீண்டும் உங்களால் வெற்றி வாய்ப்பு பெற்று நம்முடைய முதலமைச்சருடைய அமைச்சரவையில் மீண்டும் பணியாற்றக் கூடிய வாய்ப்பை தர வேண்டும் ,வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களின் மேலான அன்பான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். சென்ற தேர்தலிலும் இதே இடத்தில் அவருக்காக நான் பிரச்சாரம் செய்தேன். மீண்டும் அதே இடத்தில் அவருக்காக வாக்கு கேட்கிறேன். இந்த வாய்ப்பை கிடைத்து நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழாவது முறையாக இன்னும் எத்தனை முறையாக அவருக்காக வாக்கு கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய முதலமைச்சர் தான் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் கொண்டு வந்த முதலமைச்சர் ஆவார். அதுபோல மக்களுக்கு தந்திருக்கிற வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றி தந்திருக்கும் முதல் அமைச்சர், நமது முதலமைச்சர். மகளிர் உரிமைத் தொகை தருவதாக கோரி ஆட்சிக்கு வந்தபின் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை சகோதரிகள் வாங்கிக் இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் நம்முடைய ஆட்சி வந்தவுடன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் இரண்டு விரலை காட்டினர்.அப்போது கனிமொழி எம்பி பரவாயில்லை இரண்டு விரலை காட்டுங்கள் இரண்டு விரலைக் காட்டினால் 2000 என்று அர்த்தம். எல்லா மக்களுக்கும் தெரியும். இந்த தேர்தலோட எடப்பாடி பழனிச்சாமி கவர்னராகத்தான் போக வேண்டும். அவர் கைகட்டி அதுவும் அமிஷா மனசு வைத்தால் மட்டும் தான் கவர்னராக போக முடியும். அங்கு போய் கை கட்டி நிற்கிறார். இனிமேல் இரண்டு விரல்களை காட்டினால் 2000 என்று பொருள் ஆகும். இரண்டாயிரத்தை வழங்கக்கூடிய வாய்ப்பை மறுபடியும் எங்களுக்கு வழங்க வேண்டும். அது மட்டும் இல்லை விவசாயிகளுக்காக நம்முடைய முதலமைச்சர் எந்த மின் மீட்டர் பொருத்தப்படாத 20 லட்சம் விவசாயிகளுக்கு மின்சார மோட்டார் வழங்க உள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் தலைவர் கருணாநிதி.எட்டாயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தினால் பாதியை மோடியே எடுத்துக் கொள்வார் மீதியை வீட்டுக்குள்ளவர்கள் வாங்கிக் கொள்வார்கள். உங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கூப்பன் தருகிறேன் வீட்டுக்கு பக்கத்தில் கடைக்கு சென்று வேலையை குறைக்கும் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று 8000 ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகு அரசே உங்களுக்கு கூப்பன் தரும்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author