மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு  

Estimated read time 0 min read

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.
இதன்படி, மார்ச் 9 முதல் 11 வரை நடைபெறவிருந்த கணிதம், உணவு உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இசை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ மையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் நிலைமையை ஆய்வு செய்த பிறகு பின்னர் அறிவிக்கப்படும்.

You May Also Like

More From Author