“இலவசங்கள் வேண்டாம்னு சொன்னீங்களே விஜய்?” இப்ப மகளிருக்கு மாதம் ₹2500…. தளபதியின் அறிவிப்பால் சர்ச்சை….!! 

Estimated read time 0 min read

திரைப்படங்களில் நடிக்கும்போது ஓட்டுக்காக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய நடிகர் விஜய், தற்போது அரசியலில் நுழைந்தவுடன் அதே இலவச வாக்குறுதிகளைக் கையில் எடுத்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தன. ஆனால், அவர்களுக்குப் போட்டியாக ஒரு படி மேலே சென்று, தான் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இது ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் இது வெறும் தேர்தல் கால கவர்ச்சித் திட்டம் என்றும், சினிமாவில் இலவசங்களை எதிர்த்துவிட்டு நிஜ அரசியலில் அதையே பின்பற்றுவது முரண்பாடாக இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ தேர்தல் களத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author