சீனாவில் இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் கலப்பு திட்டம் தொடக்கம்

1 லட்சம் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் கலப்புத் திட்டம் ஒன்று, ஷான்டொங் மாநிலத்தின் வெய்ஃபங் நகரில் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பசுமை எரிபொருள் மாற்ற முயற்சியில் முக்கிய மைல் கல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

இந்நகரில் ஏற்கெனவே உள்ள இயற்கை எரிவாயு குழாய்கள் மற்றும் 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஹைட்ரஜன் கலப்பு அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெய்பங் நகர்ப்புறப் பகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு சேவையாற்றும் இத்திட்டம், குடும்பங்கள் மற்றும் உணவகங்கள் என இரண்டின் தேவைகளையம் பூர்த்தி செய்யக் கூடியது. ஏற்கெனவே உள்ள எரிவாயு உபகரணங்களை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தி பயன் பெற முடியும். இத்திட்டம் முழுமையாக செயலுக்கு வரும் பட்சத்தில் ஆண்டுக்கு ஹைட்ரஜன் நுகர்வு 13 மில்லியன் கியூபிக் மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 விழுக்காடு ஹைட்ரஜன் கலப்பு விகிதம், தேசிய அளவில் நகர்ப்புற எரிவாயு நுகர்வில் பயன்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு 30 மில்லியன் டன் அளவிலான கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு குறைக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author