தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி – வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு!

Estimated read time 0 min read

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 26, 27ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி வந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அரசுஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, அசாம் மற்றும் கேரளாவில் பயணத்தை முடித்த தேர்தல் ஆணையர்கள், வரும் 9, 10ஆம் தேதிகளில் மேற்குவங்கத்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.

அதன்பின், டெல்லியில் வரும் 11ஆம் தேதி சமூக ஊடக நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதன் பிறகு ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு மார்ச் 15 அல்லது 16ஆம் தேதிகளில் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author