சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனுடன் உள்ளூர் நேரப்படி நவம்பர் 19ஆம் நாள் முற்பகல் ரியோ டி ஜெனிரோவில் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-பிரான்ஸ் உறவு, தனிச்சிறப்பு மிக்க நெடுநோக்கு மதிப்பு மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
அதோடு, இரு தரப்புகளும் நெடுநோக்கு தொடர்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி, சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சிக்கும் உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரான்ஸுடன் உயர் நிலை பரிமாற்றத்தை தொடர்ந்து நெருக்கமாக்கி, பண்பாடு, கல்வி, உள்ளூர் பிரதேசம், இளைஞர் முதலிய துறைகளிலான ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆழமாக்க சீனா விரும்புவதாகத் தெரிவித்த ஷிச்சின்பிங், இரு தரப்புகளும் உயர் நிலைப் பொருளாதாரம் மற்றும் நிதி உரையாடல் முதலிய அமைப்பு முறைகளைச் சீராகப் பயன்படுத்தி, நலன் தந்து கூட்டு வெற்றி பெற வேண்டும் என விரும்புவதாகவும் கூறினார்.
மக்ரோன் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்தைச் சீராக செயல்படுத்தி, உயர் நிலைத் தொடர்பைத் தொடர்ந்து நெருக்கமாக்கி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என பிரான்ஸ் விரும்புவதாகக் கூறினார்.