வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு தமது மகள் கிம் ஜு ஆயுடன் வருகைத் தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உலக நாடுகளைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு வெற்றித் தின கொண்டாட்டத்திற்காகச் சீனாவிற்கு தனது மகளையும் முதல் முறையாகக் கிம் ஜாங் உன் அழைத்துச் சென்றார்.
இதனால், வடகொரியாவின் அடுத்த தலைவராக கிம் ஜாங் உன் மகளே வரக்கூடும் என்றும், இதற்காகத் தயார்படுத்தவே கிம் தனது மகளைப் பொதுவெளியில் அதிகம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாகக் கடந்த 2022ஆம் ஆண்டு ஏவுகணைப் பரிசோதனையை நேரில் காண்பதற்குத் தனது மகளை கிம் ஜாங் உன் அழைத்துச் சென்று இருந்தார்.
அதன்பிறகு அவ்வப்போது வடகொரியாவில் பொது நிகழ்ச்சிகளிலும் கிம் ஜாங் உன் மகள் தோன்றினாலும், வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றது இதுவே முறையாகும்.
கிம் ஜாங் உன் மகளுக்கு 13 வயது இருக்கலாம் என்று தென்கொரிய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.