பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இன்று காலை 10:08 மணிக்கு ஒரு ஏர்சிக்னெஸ் பையில் மிரட்டல் குறிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 294 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் 10:19 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
“ஜூன் 2, 2024 அன்று பாரிஸிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த விஸ்டாரா விமானத்தில் பாதுகாப்புக் கவலை எழுந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.” என்று விஸ்டாரா ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.