மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ எல்பிஜி) முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி தற்போது 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக மக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து பதுக்குவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டை விட, சாதாரண வீடுகளுக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யவே இந்த மாற்றம் என அரசு வட்டாரங்களில் Aகூறப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் முன்பதிவு: 21லிருந்து 25 நாட்களாக உயர்வு! மத்திய அரசு அதிரடி
