முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
14 ஆண்டுகளுக்கு பின், கோயிலில் திருப்பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
மொத்தம் ரூ.2.37 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, குடமுழுக்கு பணிகள் கடந்த ஜூலை 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின.
நேற்று மாலை 7-ம் கால பூஜையுடன் மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
இன்று அதிகாலை 3:45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் அடங்கிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது
