சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின் அரசியல் தீர்மானம்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4 முதல் 11ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது நிறைவு ஆண்டாகும். 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாகும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊன்றி நின்று, 15ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்து ஆலோசனை அளித்து, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு பொது கருத்துகளையும் ஆற்றலையும் அறிவையும் சேகரிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

You May Also Like

More From Author