ஐ.நா தணிக்கையாளர்கள் ஆணையத்தின் 77ஆவது வழமையான கூட்டம் ஜூலை 25 முதல் 26ஆம் நாள், நியூயார்க்கிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆணையத்தின் தலைவர் ஹொ கைய் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 2022ஆம் நிதி ஆண்டில், ஐ.நாவின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகளுக்கான 21 தணிக்கை அறிக்கைகள் இதில் பரிசீலனை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐ.நாவின் சட்ட இயற்றல் நிறுவனம் இந்த ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவை பற்றி ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 2023ஆம் ஆண்டின் பிற்பாதியிலான பணியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டது.ஐ.நாவின் தணிக்கையாளர்கள் ஆணையம் என்பது தனி நிபுணர்கள் அமைப்புமுறையாகும். ஐ.நாவின் பொறுப்புமுறை மற்றும் வெளிப்படை தன்மையை முன்னேற்றும் முக்கிய அமைப்புமுறையாக இருந்து, ஐ.நாவின் மேலாண்மை அமைப்புமுறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.