உலகில் புதிதாக சேர்க்கப்பட்ட பசுமை நிலத்தில் 25 சதவீத பங்கைக் கொண்டிருக்கும் சீனா

Estimated read time 0 min read

சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் வனப் பரப்பளவு 59.8 கோடி ஏக்கரை எட்டியுள்ளது. அதனையடுத்து சீனாவின் மொத்த நிலப்பரப்பில் வனப் பரப்பின் விகிதம் 25.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், சீனா 14 ஆயிரத்து 260 கோடி மரங்களுடன் உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவாகப் பசுமையாகி வரும் நாடாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சீனா உலகில் புதிதாக சேர்க்கப்பட்ட பசுமை நிலத்தில் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், சீனாவின் நில பசுமையாக்கம் மேலதிக மரங்களை நடுவதிலிருந்து மரங்களை நன்றாக நடுதல் மற்றும் பராமரித்தல் என்னும் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில், வனத்தில் உணவு உற்பத்தி அளவு 24 கோடி டன்னைத் தாண்டியது.

இது தானியம் மற்றும் காய்கறிக்குப் பிறகு மூன்றாவது மிக முக்கியமான விவசாயப் பொருளாக மாறியுள்ளது. தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளித் தொழிலின் மொத்த உற்பத்தி மதிப்பு கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி யுவானாகும். இது 6 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author