சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில் ஈட்டியுள்ள பொருளாதார மற்றும் சமூகத்தின் சாதனைகள் குறித்து சீன அரசவை ஆகஸ்ட் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தியது. கடந்த 60 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சிட்சாங் சோஷலிச அமைப்பு முறை மற்றும் மக்கள் ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்கி வெளிநாட்டு திறப்பு மற்றும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைத்துள்ளது. பொருளாதார மற்றும் சமூகத்தின் பல்வேறு லட்சியங்களில் பன்முகமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு இப்பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 27650கோடி யுவானை எட்டி 1965ஆம் ஆண்டில் இருந்ததை விட, 155 மடங்குகளாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.