தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஒருவர், தனது விடைத்தாள் நகலைக் கேட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், “தேர்வு முடிந்து 5 நாட்களுக்குள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது” எனக் கூறி இயக்ககம் அந்த மனுவை நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவி மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்; RTI மூலம் விடைத்தாள் பெறலாம்
