வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது.
இப்பட்டியலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மற்றும் நடிகர் அருண் கோவில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கங்கனா ரணாவத் தனது பூர்விகமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் களமிறங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால், ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் இருந்து வருண் காந்தியை விலக்கிவிட்டு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு அந்த தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது.