பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்.
விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நடந்த துயரமான விமான விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன்.அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. கடின உழைப்பாளியான அஜித் பவார் மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் பிரதானமாக கொண்டிருந்தார்.
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசின் நிர்வாகம் பற்றிய அவரது புரிதல் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மனவலிமையும், தைரியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Saddened by the tragic air crash in Baramati, Maharashtra. My thoughts are with all those who lost their loved ones in the crash. Praying for strength and courage for the bereaved families in this moment of profound grief.
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
