இவ்வாண்டு, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். மேலும் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். உள்நாட்டுச் சந்தை முக்கியமாகவும் வலுவாகவும் கட்டியமைக்கப்படும். வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றல் பெரிதும் முன்னேற்றப்படும். தவிரவும், ஆக்க தொழில் துறையில் முக்கிய தொழில் சங்கிலியின் உயர் தர வளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளை சீனா செயல்படுத்தும்.
மேலும், இவ்வாண்டில் அறிவியல் தொழில் துறை மீதான ஒதுக்கீட்டை அதிகரித்து, தொடர்புடைய கட்டமைப்பை மேம்படுத்தவும் சமூகக் காப்புறுதி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் சீனா தொடர்ந்து பாடுபடும். புதிய ரக நகர மயமாக்கம் மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு வளர்ச்சியைத் தூண்டி, முழுமையான பசுமைமயமாக்கத்தை விரைவுபடுத்த சீனா முயற்சி செய்யும்.
