சீன-வியட்நாம் 3+3 நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டம் நிறைவு

சீனக் கம்யூனிஸ்ட்ச கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சீன-வியட்நாம் தூதாண்மை, தேசியப் பாதுகாப்பு, காவல் ஆகிய துறைகளின் நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டத்தில் பங்கெடுத்து, இரு தரப்பு ஒத்துழைப்பு வழிகாட்டல் ஆணையத்தின் 17வது கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பிறகு சீன ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

சீனாவும் வியட்நாமும் இணைந்து, அரசியல் அமைப்பு முறை பாதுகாப்பைப் பேணிக்காத்து, தேசிய மறுமலர்ச்சியை முன்னெடுக்கும் அறிக்குறியை வெளிக்காட்டிய இந்த அமைச்சர் நிலை கூட்டம், பதற்றமான உலகிற்கு மதிப்புள்ள நிலைத்தன்மை மற்றும் ஆக்கமுள்ள சக்தியை ஊட்டியுள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்.

இரு கூட்டங்களின் சாதனைகள் குறித்து வாங்யீ கூறுகையில், சர்வதேச நிலைமையின் மாற்றம், அரசியல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான ஒத்துழைப்பு முதலிய அம்சங்கள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு, பரந்த ஒத்த கருத்தக்களை எட்டியுள்ளன என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author