நல்லெண்ண பயணமாக சீனாவுக்கு வருமை புரிந்துள்ள துர்க்மேனிஸ்தானின் தேசிய தலைவரும் மக்கள் கமிட்டியின் தலைவருமான குர்பாங்குலி பெர்டிமுகமெடெவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 18ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்ற இரு கூட்டத்தொடர்களில் 15ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சோஷலிச நவீனமயமாக்கலை சீனா அடிப்படையில் நனவாக்குவதற்கு இத்திட்டத்தின் நடைமுறையாக்கம் உறுதியான அடித்தளம் இட்டுள்ளதோடு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நன்மை புரியும் என்று தெரிவித்தார். சொந்த நிலைமைக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை உருவாக்கியுள்ள துர்க்மேனிஸ்தானுடன் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், சீன-துர்க்மேனிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை தொடர்ந்து வலுப்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஒன்றுக்கொன்று ஆதரவு என்பது இருதரப்பு பன்முக உத்திநோக்கு கூட்டுறவின் சாரம்சமாகும் என்று குறிப்பிட்ட ஷிச்சின்பிங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, பட்டுப்பாதையின் மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றின் இணைப்பை இருதரப்பும் முன்னேற்றி, பன்முக ஒத்துழைப்புக்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெர்டிமுகமெடெவ் கூறுகையில், சீனாவின் செழுமை மற்றும் வளர்ச்சி உலகிற்கு நன்மை தருகிறது. துர்க்மேனிஸ்தான்-சீனா இடையேயான ஒத்துழைப்பு இருநாட்டு மக்களின் நீண்டகால நலன்களுக்கு பொருத்தமானது என்று தெரிவித்தார். மேலும் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 முக்கிய உலகளாவிய முன்மொழிவுகளை வெகுவாகப் பாராட்டிய அவர், சீனாவுடன் இணைந்து, ஐ.நா., சீனா-மத்திய ஆசியா இயங்குமுறை உள்ளிட்ட பலதரப்பு தளங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரதேச மற்றும் உலக அளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க துர்க்மேனிஸ்தான் விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
