சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பெனின் அரசுத் தலைவர் பாட்ரிஸ் குய்லூம் அதனசே தாலோனுடன் செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-பெனின் உறவு சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இரு நாட்டுறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெனின் தரப்புடன் பல்வேறு நிலைகளிலான தொடர்பை நெருக்கமாக்கி, பல்வேறு துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நட்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவு புதிய நிலைக்கு முன்னேறுவதை தூண்ட விரும்புவதாக தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், பசுமை வளர்ச்சி, எண்ணியல் பொருளாதாரம், வேளாண் பொருட்கள், சுகாதார மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான பல ஆவணங்கள் கையொப்பமிடப்படும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்தனர்.
மேலும், சீனாவும் பெனினும் நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்குவது பற்றிய கூட்டறிகையும் வெளியிடப்பட்டுள்ளது.