ஹோர்முஸ் நீரிணை நிலை மோசமாகுவதை தவிர்க்க சீனா வீட்டோ

மத்தியக் கிழக்கில் மோதல் மோசமாவதைத் தவிர்க்கும் வகையிலும், தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை உருவாக்கவும், ஹோர்முஸ் நீரிணை குறித்த வரைவு தீர்மானத்துக்கு எதிராக, ஏப்ரல் 7ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வாக்களித்ததாக ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் 16ஆம் நாள் தெரிவித்தார்.

 

இது பற்றி அவர் கூறுகையில், வளைகுடா நாடுகளின் சார்பில் பஹ்ரைன் முன்வைத்த இந்த வரைவுத் தீர்மானத்துக்குச் சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதோடு, வளைகுடா நாடுகளின் முக்கிய கவலைகளையும் முழுமையாக புரிந்து கொண்டுள்ளது அதே வேளை, அதிகாரம் இல்லாத இராணுவ நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வமான சாக்குப்போக்கை ஐ.நா.பாதுகாப்பவை வழங்க கூடாது என்று சீனா கருதுவதாக தெரிவித்தார். மேலும், சர்வதேச நியாயம் மற்றும் நீதியைப் பேணிக்காக்கும் வகையில், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author