நவ்ரு குடியரசின் அரசுத் தலைவராகத் தொடர்ந்துதேர்ந்தெடுக்கப்பட்ட
டேவிட் ராணிபோக் அடேங்கிற்கு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-நவ்ரு தூதாண்மை உறவு இயல்பு
நிலைக்கு திரும்பியது முதல் இதுவரை, இரு நாட்டுறவு சீரான வளர்ச்சியடைந்து
வருகிறது. பல்வேறு துறைகளில் பெறப்பட்டுள்ள ஒத்துழைப்புச் சாதனைகள் இரு நாடுகள்
மற்றும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்துள்ளன என்றார். மேலும், இரு நாட்டுறவின்
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் டேவிட் ராணிபோக் அடேங்குடன்
இணைந்து, இரு நாட்டுறவை புதிய கட்டத்துக்கு முன்னேற்ற விரும்புவதாகவும்
தெரிவித்தார்.