ஈரான் போர் எதிரொலி:அரபு நாடுகள், ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுத்தம்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பையில் சுமார் 125 விமானங்களும், திருச்சியிலிருந்து மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author