பிரிட்டன் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான தலைமையமைச்சரின் ஆலோசகருடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, பிரிட்டன் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான தலைமையமைச்சரின் ஆலோசகர் பவலுடன் மார்ச் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இரு தரப்புகள் சீன-பிரிட்டன் உறவின் நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.

பவல் கூறுகையில், பிரிட்டன் தலைமையமைச்சர் ஸ்டார்மர் சீனப் பயணத்தில் பெற்றுள்ள சாதனைகளை சீனாவுடன் கூட்டாக செயல்படுத்தி, நீண்டகால மற்றும் நிதானமான பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வளர்க்க பிரிட்டன் விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், ஈரான் நிலைமை, உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author