லான்சாங்-மேகாங் ஒத்துழைப்புத் தலைவர்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றதன் 10வது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் வாங்யீ உரை

லான்சாங்-மேகாங் ஒத்துழைப்புத் தலைவர்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றதன் 10வது ஆண்டு நிறைவுக்கான விருந்து மார்ச் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இவ்விருந்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் மேகாங் ஆற்று நாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், லான்சாங்-மேகாங் ஒத்துழைப்பு, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது என்றார்.

மேலும், நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றைக் கொண்ட சுற்றுப்புறத் தூதாண்மை கொள்கையை தொடர்ந்து கடைப்படிக்கும் சீனா, லான்சாங்-மேகாங் ஒத்துழைப்புக்கு புதிய பொற்காலத்தைத் துவக்க 5 மேகாங் ஆற்று நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author